செய்திகள் :

மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங்கம்புலி ஷேரிங்க்ஸ்

post image

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருந்த `மகாராஜா' திரைப்படம் நடிகர் சிங்கம்புலிக்கும் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. காமெடி வேடங்களில் நகைச்சுவைப் புயலாகச் சுற்றியவர் இந்தப் படத்தில் வில்லனாக களமிறங்கி ஆச்சரியப்படுத்தியிருந்தார். படங்களில் சிரிக்க வைத்த சிங்கம்புலியை `மகாராஜா' படத்திற்குப் பிறகு பலரும் கண்டு அஞ்சுகிறார்களாம். சூர்யா, ஜோதிகாவை வைத்து அவர் இயக்கியிருந்த `மாயாவி' திரைப்படமும் வெளியாகி 20 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது.

தற்போது `செருப்புகள் ஜாக்கிரதை' என்ற வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்காக அவரைச் சந்தித்து அவருடைய கரியரின் சில பக்கங்களை தேர்ந்தெடுத்துப் பேசினோம்.

``நீங்க முன்னணி கதாபாத்திரத்துல நடிச்சிருக்கிற `செருப்புகள் ஜாக்கிரதை' வெப் சீரிஸ் வெளியாகியிருக்கு! இந்த தொடக்கம் எவ்வளவு மகிழ்ச்சியான உணர்வைக் கொடுக்குது?”

``ஆமா, `ஜீ 5' ஓ.டி.டி தளத்துல `அயலி' சீரிஸுக்குப் பிறகு நான் நடிச்சிருக்கிற இந்த `செருப்புகள் ஜாக்கிரதை' வெப் சீரிஸ் வெளியாகியிருக்கு. இந்த சீரிஸோட படப்பிடிப்பை இரண்டே மாதத்துல முடிச்சிட்டோம். இதற்கிடையில, சென்னையில அதிக கனமழையும் வந்திருந்தது. அதையெல்லாம் எதிர்கொண்டு இந்த சீரிஸை எடுத்து முடிச்சிருக்கோம். `நாய்கள் ஜாக்கிரதை' `திருடர்கள் ஜாக்கிரதை'னு பதாகைகளை பார்த்திருப்போம். இது `செருப்புகள் ஜாக்கிரதை'. இந்த சீரிஸோட ஐடியாவைக் கேட்டதும் எனக்கு ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது.

நம்ம எவ்வளவுதான் பணம் கொடுத்து வாங்கிய செருப்பாக இருந்தாலும் வீட்டுக்கு வெளியேதான் விட்டிருப்போம். அதுபோலவே, இந்த சீரிஸ்ல ஒரு டெட் பாடி ஒரு முக்கியமான பங்காக இருக்கும். நம்ம குடும்பத்துக்காக ஒருவர் எவ்வளவுதான் உழைச்சிருந்தாலும் அவர் மாய்ந்தப் பிறகு உடல் வீட்டுக்கு வெளியிலதான் வச்சிருப்பாங்க. இப்படியான விஷயங்களோட இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் காமெடியை சேர்த்திருக்கார். அதுக்கூடவே, லைட்டாக த்ரில்லர் டச்சும் இருக்கு! `மகாராஜா' படத்துக்குப் பிறகு இதுல முன்னணி கதாபாத்திரத்துல நடிச்சிருக்கிறதுனால பலரும் எனக்கு கால் பண்ணி வாழ்த்துறாங்க. அது நிறைவாக இருக்கு.”

நடிகர் சிங்கம்புலி

``என்னைக்காவது நம்ம முன்னணி கதாபாத்திரத்துல ஒரு திரைப்படத்துல நடிக்கணும்னு ஆசைப்பட்டிருக்கீங்களா?”

``நான் சொல்ற இந்த விஷயத்தை பலரும் நம்பமாட்டாங்க. `நான் கடவுள்' படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் படத்துடைய போஸ்டரை பார்த்து `நம்ம இந்தப் படத்துல எங்க இருப்போம்'னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்புறம் என் மனைவிக்கிட்ட `ரெண்டு நாள்ல படம் பார்த்துட்டு இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் என்னை நடிகிறதுக்கு அழைப்பாங்க. ஆனால் நான் அப்போ ஒரு நாளைக்கு 5000 ரூபாய் கேட்பேன்'னு சொன்னேன். படம் வெளியாகி கொஞ்ச நாட்களுக்குப் பிறகு என்னை யாரும் கூப்பிடல. என் மனைவி அப்போ வட இந்தியாவுல இருந்தாங்க. அவங்க எனக்கு கால் பண்ணி வாய்ப்பு வந்ததானு கேட்டாங்க. அதுக்கு நான் `இப்போதான் படம் பார்த்துட்டு என்னை போடுறதுக்கு டிஸ்கஸ் பண்ணீட்டு இருப்பாங்க'னு சொன்னேன். அதுக்கு அவங்க, `முதல்ல எடுத்ததும் 5000 கேட்காத, முதல்ல 2000 கேளு அப்புறம் பார்த்துக்கலாம்'னு சொன்னாங்க. அதன் பிறகு 2 மாசம் கழிச்சும் என்னை யாரும் கூப்பிடல. என் மனைவிகூட நானும் டெல்லிக்குப் போயிட்டேன். என்னுடைய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இப்படியானதாகதான் இருந்திருக்கு. இன்னைக்கு என்னை மட்டுமே வச்சு சில நாட்கள்ல ஷூட் நடக்குது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணனும்ங்கிற விஷயத்துலதான் என்னுடைய கவனம் இருக்கு.”

``அப்புறம் எப்போதான் ராசு மதுரவன் சார் உங்களை `மாயாண்டி குடும்பத்தார்' படத்துக்குக் கூப்பிட்டாரு ?”

``நானும் ராசு மதுரனும் சுந்தர்.சி சார்கிட்ட வேலை பார்த்திருக்கோம். பிரபுதேவா நடிச்சிருந்த `நாம் இருவர் நமக்கு இருவர்' படத்துல நாங்க ஒண்ணாக வேலை பார்த்தோம். `உன்னை நான் நடிக்கிற வைக்கிறேன்'னு முதல்ல சொன்னது ராசு மதுரவந்தான். நான் `நான் கடவுள்' படத்தை முடிச்சிட்டு சீமான் அண்ணன்கூடதான் இருந்தேன். அவர் `ஒரு கதை ரெடி பண்ணு, தயாரிப்பாளர் சொல்றேன்'னு சொன்னாரு. அவர்கூட இருக்கும்போது சீமான் அண்ணனை பார்க்க வந்து ` பத்து இயக்குநர்களை வச்சு ஒரு படமெடுக்கப் போறேன்'னு இயக்குநர் ராசு மதுரவன் சொல்லி அட்வான்ஸ் கொடுத்தார். அங்கிருந்து கிளம்பியவர் நானும் அதே இடத்துலதான் இருக்கேன்னு தெரிஞ்சுகிட்டு திரும்ப வந்து எனக்கு பணம் கொடுத்துட்டு நடிக்கக் கூப்பிட்டாரு. அப்போ என்னுடைய கதாபாத்திரத்தை பத்தி எதுவுமே சொல்லமாட்டேன்னு சொல்லிட்டாரு. பிறகு, என்னுடைய கதாபாத்திரத்தை சொன்னதும் நான் நடிக்க வரலைனு சொல்லிட்டேன்.

அப்புறம் மணிவன்னண் சார் `ரெண்டு நாள் மட்டும் வர சொல்லு'னு அவர்கிட்ட சொல்லியிருக்காரு. அப்புறம் மணிவன்ணன் சாரே கால் பண்ணி, `வாடா, ரெண்டு நாள் மட்டும் வந்து நடிச்சிட்டு போ! நம்ம ஊருக்குதானே போறோம். வா, அப்பாவை கூடிட்டு போ'னு சொல்லி அழைச்சாரு. அங்க போனேன். என்னை மொத்தமாக படத்துல 47 நாட்கள் நடிக்க வச்சாங்க. ஒரே ஒரு பாடல்ல மட்டும்தான் நான் இல்ல. மற்றபடி அத்தனை காட்சிகளிலும் நான் ஏதோவொரு இடத்துல இருப்பேன்.

மாயாண்டி குடும்பத்தார்
மாயாண்டி குடும்பத்தார்

`டிராகன்' படம் ரிலீஸுக்குப் பிறகு ஐந்து இயக்குநர்கள் அந்தப் படத்துல நடிச்சிருந்தைப் பற்றி பேசினாங்க. அப்போ எல்லோரும் `மாயாண்டி குடும்பத்தார்'ல மொத்த 10 இயக்குநர்கள் நடிச்சிருந்தை பலருக்கு நினைவுப்படுத்தி சமூக வலைதளப் பக்கங்கள்ல பதிவிட்டாங்க! அதை பார்த்தீங்களா?”

``ஆமா, பார்த்தேன். நிறைய பேர் போட்டிருந்தாங்க. இப்போ சமீபத்துல என் நண்பர் ஒருவர் ஐம்பது இயக்குநர்களை நடிக்க வைத்து இயக்கப்போறதாக சொன்னாரு. 10 இயக்குநர்களை வச்சு ஒரு போட்டோஷூட் பண்றதுக்கு முதல்ல ராசு மதுரவன் திட்டமிட்டாரு. போட்டோஷூட் நடக்குற அன்னைக்குதான் மும்பை தாஜ் ஹோட்டல்ல தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. எல்லோரும் பரபரப்பாக பேசிட்டு, செட்ல இருந்த டி.வி-யை பார்த்துட்டு இருந்தாங்க. ராசு மதுவரன் `அதெல்லாம் உண்மையாக இருக்காது. படமாக இருக்கும்'னு சொன்னாரு.

அப்புறம் உண்மையாகவே தீவிரவாதிகள் தாக்குதல் நடந்ததுனு தெரிய வந்தது. 10 இயக்குநர்களை அதன் பிறகு ஒருகிணைச்சு போட்டோஷூட் பண்ணினாரு. 11 மணிக்கு தொடங்கின அதன் போட்டோஷூட் 12.30 மணிக்குதான் முடிஞ்சது. அப்போ மணிவண்ணன் சார் `இவங்களை வச்சு போட்டோகூட எடுக்க முடியல. எப்படி ஒரு படத்தை எடுக்கப்போறான்'னு சொன்னாரு. இயக்குநர்கள் பலர் இருக்கிறதுனால பலரும் அவங்களுடைய பரிந்துரைகளை அனைத்து துறைகளிலும் சொல்வாங்க. ஆனால், படப்பிடிப்பு தளத்துல ராசு மதுரவன் கமான்ட் பண்ணி யாரையும் உள்ள ஈடுபடவிடல.”

மாயாவி திரைப்படம்
மாயாவி திரைப்படம்

``நீங்க இயக்கியிருந்த `மாயவி' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்திருக்கிறது! இப்போது சூர்யாவுடன் `ரெட்ரோ'வில் நடித்து வருகிறீர்கள் எனக் கேள்விபட்டோமே...”

``ஆமா, எனக்கே இதை நம்ப முடியல. `மாயாவி டு ரெட்ரோ' பயணம் நம்ம ஏதோ ஒரு விஷயத்துல சரியாக இருந்திருக்கோம். அதுனாலதான் சினிமா நம்மை வச்சிருக்குனு புரிஞ்சுகிட்டேன். `ரெட்ரோ' படத்துல ஒரு பெரிய சிங்கிள் ஷாட் சீன் இருக்கு. டான்ஸ், பைட்னு பல விஷயங்கள் இருக்கிற அந்த ஷாட் பண்ணவே முடியாதது. ஆனால், கார்த்திக் சுப்புராஜ் நடத்திக் காட்டியிருக்கிறார். நான்கு நாட்கள் அந்த ஷாட் எடுக்கிறதுக்கு செலவாகுச்சு. அப்போ சூர்யா சார் கொஞ்சம் ப்ரீயாக இருந்தாரு. அவரை அப்போ போய் மீட் பண்ணேன். நான் போனதும் `மஹாராஜா'னு சொல்லிக் கட்டிப்பிடிச்சாரு. அப்புறம் `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளி'னு கேட்டவர் `பார்ப்போம்'னு சொன்னாரு.”

இயக்குநர் மகேந்திரன் நினைவைப் போற்றும் வகையில் ஃபிலிம் & மீடியா அகாடெமி துவக்கம்!

பொதுமக்களுக்குப் பிடித்த தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலர் இருப்பர். ஆனால், இயக்குநர்களுக்குப் பிடித்த இயக்குநர் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் இயக்குநர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் திரைமொழியை மாற்றி... மேலும் பார்க்க

'மதகஜராஜா' ரிலீஸுக்கு பின் விஷாலை இயக்குவது யார்?! - படப்பிடிப்பு, ஹீரோயின் அப்டேட்

தமிழ் சினிமாவில் ஒரு மிராக்கிளாக வெளியான படம் 'மதகஜராஜா'. படம் உருவாகி ஒரு மாமங்கத்துக்கு பிறகு இந்தாண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து, வசூலை அள்ளியது. விஷாலுக்கும், சந்தானத்திற்கும் ஒரு பிரமாண்ட ... மேலும் பார்க்க

Vadachennai 2: தனுஷ் ரோலில் மணிகண்டனா? வடசென்னை - 2 அப்டேட் என்ன?

இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா எனப் பலரும் நடித்து பரபரப்பையும் கவனத்தையும் ஏற்படுத்திய படம் 'வடசென்னை'. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடு... மேலும் பார்க்க

Good Bad Ugly: "ஆலுமா டோலுமா மாதிரி பண்ணணும்னு ஆதிக் சொன்னாரு" - GBU பாடலாசிரியர் ரோகேஷ் பேட்டி

`குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான `GBU மாமே' குறித்தான பேச்சுதான் சமூக வலைத்தளப் பக்கங்களில் தற்போது நிரம்பியிருக்கிறது. பட... மேலும் பார்க்க