செய்திகள் :

Vadachennai 2: தனுஷ் ரோலில் மணிகண்டனா? வடசென்னை - 2 அப்டேட் என்ன?

post image

இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா எனப் பலரும் நடித்து பரபரப்பையும் கவனத்தையும் ஏற்படுத்திய படம் 'வடசென்னை'.

அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது பற்றி பலவித பேச்சுவார்த்தைகள் நடந்தன. உறுதியான தகவல்கள் கிடைக்காமல் இருந்தன.

அடுத்த படமாக 'வடசென்னை 2' படத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள் எனும்போது எல்லோரும் அதை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும்போது தனுஷ் வெற்றிமாறன் இரண்டு பேருமே தனித்தனியே வேறு படம் தொடங்கியிருக்கிறார்கள்.

Vetrimaaran, dhanush
Vetrimaaran, dhanush

இப்போதுதான் 'வடசென்னை 2' பற்றிய சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. முதல் பாகம் 2018 அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகிறது. கிட்டத்தட்ட ஆறு வருடம் கணிசமாக கழித்து இப்போதுதான் நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

முதல் பாகம் வெளியாகும்போதே இதன் இரண்டாம் பாகமும் கண்டிப்பாக உருவாகும் என்று சொல்லியிருந்தார் வெற்றிமாறன். இது இப்படி இருக்க தனுஷ் வெற்றிமாறன் எங்கு சேர்ந்து காணப்பட்டாலும் 'வடசென்னை 2' எப்போது? என்ற கேள்வி அவர்களைத் துரத்திக்கொண்டேயிருந்தது.

இப்போது தனுஷ் வெற்றிமாறன் இருவருமே தொடர்ந்து பிஸியாக இருப்பதாலும் சமீபத்தில் இருவரும் சேர்ந்து இந்தப் படத்தை எடுக்க நேரம் அமையாது என்பதாலும் வேறு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் டைரக்டர் வெற்றிமாறன்.

வடசென்னை - வெற்றிமாறன், தனுஷ்
வடசென்னை - வெற்றிமாறன், தனுஷ்

'வடசென்னை 2' படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநர் கார்த்திகேயன் இயக்குவார் என்று தெரிகிறது. டைரக்டர் வெற்றிமாறனே அதைத் தயாரிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். தனுஷ், அமீர் நடித்த முக்கிய கதாபாத்திரங்களுக்கு வேறு நடிகர்களை அறிமுகம் செய்ய முயற்சி நடக்கிறது.

இதற்கிடையில் அந்த பழைய வடசென்னையில் பணியாற்றி வந்தவர்களே இதில் நடித்தால் நன்றாக இருக்கும். அந்தக் குழுவை மாற்றக்கூடாது எனவும் பழைய நடிகர்களே வரவேண்டும் என்றும் பாடுபடுகிறார்கள்.

அனேகமாக இயக்குநர் இடத்தில் வெற்றியின் உதவி இயக்குநர் கார்த்திகேயனும், கதாநாயகனாக 'குடும்பஸ்தன்' மணிகண்டனும் நடிப்பார் எனத்தெரியாது. ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

'திரு. ஜோசப் விஜய் அவர்களே இது தவறு... நீங்கள் சினிமா வாரிசு' - விஜய்யை சாடிய போஸ் வெங்கட்

திமுக கூட்டத்தில் விஜய்யை போஸ் வெங்கட் விமர்சித்துப் பேசியிருக்கிறார். திமுக கூட்டத்தில் பேசிய போஸ் வெங்கட், " ஸ்டாலின் கடின உழைப்பாளி. 14 வயதில் இருந்து உழைக்கிறார். கோபாலபுரத்தில் திமுக இளைஞரணி என்ற... மேலும் பார்க்க

``என்னைக் காப்பாற்றிய அந்த 2 படங்கள்..'' - கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் சசிகுமார் ஓப்பன் டாக்

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சசிகுமார், "ராஜுமுருகன் படத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு எழுத்துகளும், வார... மேலும் பார்க்க

Redin Kingsley: ``இளவரசி பிறந்திருக்கிறாள்'' - மகிழ்ச்சியில் ரெடின் கிங்ஸ்லி -சங்கீதா தம்பதி

நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் சீரியல் நடிகை சங்கீதாவுக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நடனத்தின் பக்கம் இருந்த ரெடின் கிங்ஸ்லியை இயக்குநர் நெல்சன் சினிமா பக்கம் அழைத்து வந்து `கோலமாவு கோகில... மேலும் பார்க்க

இயக்குநர் மகேந்திரன் நினைவைப் போற்றும் வகையில் ஃபிலிம் & மீடியா அகாடெமி துவக்கம்!

பொதுமக்களுக்குப் பிடித்த தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலர் இருப்பர். ஆனால், இயக்குநர்களுக்குப் பிடித்த இயக்குநர் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் இயக்குநர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் திரைமொழியை மாற்றி... மேலும் பார்க்க