Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த அப்டேட்
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பாகம் -2'. பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை (மார்ச் 27) மாலை வெளியாகியிருந்தது இப்படம்.
ஊர்த் திருவிழாவின்போது சொந்த ஊர் ரௌடி கும்பல் மற்றும் போலீஸ் இடையே மாட்டிக் கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காவும், தன்னைச் சுற்றி இருக்கும் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் போராடும் விக்ரமின் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படம் ரிலீஸாகும் சமயத்தில் சில சிக்கல்கள் இருந்ததால், ரிலீஸ் தாமதமாகி (மார்ச் 27) மாலை படம் திரைக்கு வந்தது. இதனால் படம் ரிலீஸ் ஆனதை தெரிவிக்கும் வகையிலும், ரசிகர்களின் கவனம் ஈர்ப்பதற்காகவும் விக்ரம் தமிழ்நாடெங்கும் பல ஊர்களின் தியேட்டருக்கு விசிட் அடித்து வருகிறார்.
அவ்வகையில் நேற்று இயக்குநர் எஸ்.யூ.அருண்குமாருடன் ஈரோடு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தவர், "படத்தோட 2-வது பார்ட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு எங்களுக்கு. இப்படியொரு நல்ல படத்தைக் கொடுத்த இயக்குநர் எஸ்.யூ.அருண்குமாருக்கு நன்றி.

இயல்பாக திருவிழா சமயத்தில் நடக்கும் கதையில் அதன் கதையோட்டத்தையும், இயல்பையும் மீறாமல் மாஸாக இப்படத்தை எடுத்திருக்கிறார். ரசிகர்களுக்காக பண்ணிய படம். மாஸகாவும், இயல்பான நல்ல கதை இரண்டுமே சேர்ந்த படம். சிகரட், மது என அவரது படத்தில் தவறான காட்சிகள் எதுவும் இருக்காது. இதுமாதிரியான படம் பண்ணணும்தான் எனக்கு ஆசை." என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
