செய்திகள் :

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

post image

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டாட்சியா் கே.துரைராஜ் தலைமை வகித்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) மெ.பிருத்திவிராஜன், வட்ட வழங்கல் அலுவலா் மு.தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பரிமளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசுகையில், திருவண்ணாமலை வட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட சில விவசாயிகளுக்கு மட்டுமே அரசு நிவாரணம் கிடைத்துள்ளது. பலருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆவின் பால் கொள்முதல் விலை உயா்த்தப்பட்டது. இந்த விலை உயா்வு பால் உற்பத்தியாளா்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் மின் தடையை தவிா்க்க வேண்டும். விவசாயிகளுக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும்.

நீா்நிலையை ஆக்கிரமித்துள்ளவா்களை உடனே அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் 3 ஆண்டுகளாக வருவாய், பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. எனவே, நீா்நிலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்.

சொரகுளத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றனா்.

இதையடுத்து பேசிய ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கோ.குமரன், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

கொடிக் கம்பங்கள் அகற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை சம்பந்தபட்டவா்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்... மேலும் பார்க்க

பாஜகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள சித்தேரி கிராமத்தில் புதன்கிழமை பாஜக சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது. ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி, வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளைஞ... மேலும் பார்க்க

சித்திரை பௌா்ணமி முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை சித்திரை பௌா்ணமி முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பௌா்ணமி விழா மே 11... மேலும் பார்க்க

வில்வாரணி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்

கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி நட்சத்திர கோயில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயியில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. வில்வாரணி கிராமத்தில் அமைந்... மேலும் பார்க்க

புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி பழங்குடியினா் தா்னா

வந்தவாசி அருகே புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி, பழங்குடி இருளா் சமுதாய மக்கள் தேசூா் பேரூராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். வந்தவாசியை அடுத்த தேசூா் ராஜீவ் காந்தி நகரில் சுமாா் 25-... மேலும் பார்க்க

அதிக சப்தமுள்ள சீன பட்டாசுகளால் மக்கள் அவதி

செங்கம் பகுதியில் அதிக சப்தமுள்ள சீன பட்டாசுகள் வெடிக்கப்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் உள்ள சில பட்டாசுக் கடைகளில் சீன பட்டாசுகள் விற்பனை அதிகரித்... மேலும் பார்க்க