MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?
பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் தங்களை அங்கீகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசினார்.
'2026 தேர்தலில் தவெக - திமுக இடையேதான் போட்டி" என தவெக தலைவர் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
"விஜய் அவருடைய கருத்தைச் சொல்கிறார். நாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், கட்சி வளர்வதற்காக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக கருத்து சொல்வார்கள். விஜய்யும் அப்படித்தான் பேசியிருக்கிறார்.
பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். அதற்கான வாய்ப்பையும் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஏன் விஜய் அப்படி கூறினார் என்று அவரிடம் நீங்கள்தான் கேட்க வேண்டும்" என்றார்.
மேலும் அதிமுக தலைவர்கள் பற்றி தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியதற்கு, 'எங்கள் தலைவர்கள் அப்படி இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர். புதிதாகக் கட்சி தொடங்குபவர்களுக்கு அவர்கள் வழிகாட்டியாக இருக்கின்றனர். அதனால் அவர்களைப் பற்றி கூட்டத்தில் பெருமையாகப் பேசியுள்ளனர்" என்றார்.
மேலும், செங்கோட்டையன் தில்லிக்கு சென்றது பற்றிய கேள்விக்கு, 'அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது' என பதிலளித்தார்.
இதையும் படிக்க | 2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!