மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - சல்மான் கான் ஆதங்கம்
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட்டில் 'சிக்கந்தர்' படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சல்மான் கானும், ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருகின்றனர்.
நாளை ( மார்ச் 30) இத்திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் தொடர்ந்து புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சல்மான் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில், "தென்னிந்திய நடிகர்களின் படங்களை நாங்கள் பார்க்கிறோம். ஆனால் எங்களின் படங்களை அவர்கள் பார்ப்பதில்லை" என்று கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாகப் பேசிய அவர், "ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சூர்யா, ராம் சரண் போன்றோர் படங்கள் இங்கு (வட இந்தியா) வெளியாகும்போது நாங்கள் சென்று பார்க்கிறோம். அவை நன்றாக ஓட்டுகின்றன. ஆனால் என் படங்கள் அங்கு வெளியாகும்போது அவர்களின் ரசிகர்கள் சென்று பார்ப்பதில்லை.

என்னைப் பார்க்கும்போது ரசிகர்கள் 'பாய் பாய்' என்கிறார்கள். ஆனால் தியேட்டருக்குச் செல்வதில்லை. நாங்கள் இங்கு அவர்களை ஏற்றுக்கொள்வதுபோல அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்வதில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...