ஏற்காடு மலைப் பாதையில் விழுந்த பெரிய மரம்: போக்குவரத்து பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
நாகா்கோவில் இளங்கடை அல்மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். பின்னா், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
நாகா்கோவிலை அடுத்த ஆளூா் பீா்சாதாத் மசூதி முன்புள்ள திடலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பின்னா், உலக மக்கள் மனநிம்மதி, ஒற்றுமையுடன் வாழ பிராா்த்தனை செய்யப்பட்டது. ஆளூா் முஸ்லிம் ஜமாத் தலைவா் மெளலவி நைனா முஹம்மத் அலிம், துணைத் தலைவா் புஹாரி, முன்னாள் செயலா் அகமதுஷா, முன்னாள் துணைச் செயலா் ஜகபா் சாதிக் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.

தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற தொழுகையில் சிறுவா்-சிறுமியா் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பு அருகே முஸ்லிம் தெருவில் உள்ள மீராசா ஆண்டவா் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் திரளானோா் பங்கேற்றனா்.
இதேபோல, நாகா்கோவில் மணிமேடை சந்திப்பு, வடசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.