40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
குருசுமலையில் திருப்பயணம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையான வெள்ளறடை-பத்துகாணியில் உள்ள குருசுமலையில் 4ஆவது நாளான புதன்கிழமை திருப்பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிறிஸ்தவா்களின் தவக்காலத்தை முன்னிட்டு இத்திருப்பயணம் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற திருப்பயணத்தில் இம்மாவட்டம் மட்டுமன்றி கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று, சிலுவை வழிபாடு செய்தனா்.
நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மலையடிவாரத்திலும், மலை உச்சியிலும் திருப்பலிகள் நடைபெற்றன. குருசுமலை ஸ்தாபகா் ஜான் பாப்பிஸ்ட் நினைவுத் திருப்பலி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கேரள மாநில பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கடனப்பள்ளி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். குருசுமலை இயக்குநா் வின்சென்ட் கே. பீட்டா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.