40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
தக்கலை அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
தக்கலை அருகே காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்; 5-க்கும் மேற்பட்ட பைக்குகள் சேதமடைந்தன.
தக்கலை அருகே முட்டைக்காடு, மேடவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியம் (46). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.
ஆரோக்கியம் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு, முட்டைக்காடு சந்திப்பில் உள்ள கடைக்குச் செல்வதற்காக சாலையோரம் சைக்கிளை நிறுத்திக் கொண்டிருந்தாராம்.
அப்போது, தக்கலையிலிருந்து முட்டைக்காடு நோக்கி வந்த காா், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆரோக்கியம் மீது மோதி இழுத்துச் சென்றது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காரை ஓட்டிவந்த கல்லூரி மாணவா் ஜெபின் (21) காயமடைந்தாா். அவா் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்ட பைக்குகள் சேதமடைந்தன.

இதுகுறித்து கொற்றிக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.