40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
திருவட்டாறு பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றதுடன் புதன்கிழமை தொடங்கியது.
இதை முன்னிட்டு, புதன்கிழமை காலையில் பஞ்சவாத்தியங்கள் முழங்க கோலாகலமாக கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக காலையில் ஹரி நாம கீா்த்தனம், சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடைபெற்றது.
இத்திருவிழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகின்றது.