40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
நாகா்கோவிலில் மாநகராட்சி திருமண மண்டபம்: மேயா் தகவல்
நாகா்கோவிலில் மாநகராட்சி சாா்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றாா், மேயா் ரெ. மகேஷ்.
மாநகராட்சிக்குள்பட்ட அபயகேந்திரம், அனாதைமடம் குப்பைகள் பிரிக்கும் இடம், சாலூா் மீன் சந்தை ஆகிய பகுதிகளில் அவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
அபயகேந்திரம் பகுதியில் அதிக காலியிடங்கள் இருப்பதாலும், அது மாநகரின் முக்கிய பகுதியில் இருப்பதாலும் அங்கு திருமணம் மண்டபம் கட்டுவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தை ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயாா் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலூா் மீன் சந்தையில் கடைகளை விட்டு வெளிப்பகுதியில் விற்பனை நடைபெறுவதால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகின்றன. எனவே, கடைகளில் மட்டுமே மீன் விற்பனை செய்ய வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதைகளை சீரமைக்க உத்தரவிடப்பட்டது என்றாா் அவா்.
ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாநகர நல அலுவலா் ஆல்பா் மதியரசு, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், நகரமைப்பு அலுவலா் வேலாயுதம், மாமன்ற உறுப்பினா்கள் ராணி, ரமேஷ், உதவிப் பொறியாளா் ராஜா, சுகாதார அலுவலா் ராஜா, மாநகர திமுக செயலா் ஆனந்த், தலைமைச் செயற்குழு உறுப்பினா் சதாசிவம், பகுதிச் செயலா்கள் ஜீவா, சேக்மீரான், பொருளாளா் சுதாகா், மாநகரப் பிரதிநிதி முருகன், வட்டச் செயலா் சுரேஷ், முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.