40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவருக்கு 320 நாள்கள் சிறை தண்டனை
தக்கலை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியவருக்கு 320 நாள்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பள்ளியாடியைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் என்ற தங்கமணி. இவா் கடந்த ஆண்டு அக்டோபா் 21ஆம் தேதி, தக்கலை அருகே பரைக்கோட்டில் உள்ள ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலின் உண்டியலை உடைத்து ரூ. 2,020-ஐ திருடிச் சென்றாா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, தங்கமணியைக் கைது செய்து, பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
வழக்கை நீதிபதி பிரவின்ஜீவா விசாரித்து, தங்கமணிக்கு 320 நாள்கள் சிறை தண்டனை, ரூ. 200 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ரேவதி ஆஜரானாா்.