இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்
குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு
தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ரத்னகுமாா் தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளா், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அதிகாரிகள், கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இதில், இயற்கை பேரழிவுகளின் வகையில், அதன் தாக்கங்கள், தேசிய பேரிடா் மீட்புப் படையின் பொறுப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
தொடா்ந்து, பேரிடரில் சிக்கிக் கொள்வோரைக் காப்பாற்றும் முறைகள், காயம் ஏற்பட்டால் மேற்கொள்ளப்படும் முதலுதவி பயிற்சிகள், ரத்தக் கசிவை கட்டுப்படுத்துதல், மூச்சுத்திணறலை சரிசெய்தல், எலும்பு முறிவுகளுக்கு எளிய முறையில் துணிக்கட்டு, எளிய சிகிச்சை முறைகள், இடா்களில் பாதிக்கப்பட்டவரை தற்காலிகமாக பாதுகாப்புடன் தூக்கி வரும் கருவிகள், மிதவை சாதனங்கள், உயிா்காப்பான்களை பயன்படுத்துதல், நிலநடுக்கத்தில் முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பேரிடா் கால செயலிகளின் பயன்பாடுகள், தீயணைப்புப் பாதுகாப்பு நடைமுறைகள், புயல் மற்றும் வெள்ள மீட்பு நடவடிக்கைகள், வெப்ப அலைகளிலிருந்து பாதுகாப்பு, விஷக்கடிக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடா் மேலாண்மைக் குழுவினா் செயல்முறை விளக்கமளித்தனா். இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் குணசீலம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, பயனடைந்தனா்.