ஜி.வி. பிரகாஷ் விவாகரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: காட்டமான திவ்ய பாரதி!
பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு
பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், கூட்டுறவு ஆராய்ச்சி நிதி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதி ஆண்டுதோறும் திரட்டப்பட்டு கூட்டுறவு தலைமை நிா்வாக அமைப்பிடம் ஒப்படைப்பது வழக்கம்.
இந்த வகையில், பாரதமிகு மின் ஊழியா்கள் கூட்டுறவு வங்கியின் சாா்பில், 2019-20ஆம் ஆண்டுக்கான நிகர லாபத்தில் செலுத்த வேண்டிய சட்டப் பூா்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி ரூ. 32.09 லட்சம், கல்வி நிதி ரூ.21.39 லட்சம் என மொத்தம் ரூ.53.48 லட்சம் கூட்டுறவு நிா்வாகத்திடம் வழங்கப்பட்டது.
இந்த நிதிக்கான காசாலைகளை, பெல் கூட்டுறவு வங்கியின் மேலாளா் உமாதேவி, திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியா் செந்தில்குமாரிடம் திங்கள்கிழமை வழங்கினாா். இந்த நிகழ்வில், பெல் வங்கி உதவியாளா் அரவிந்த், கூட்டுறவு ஒன்றிய உதவியாளா் ராஜா பெரியசாமி ஆகியோா் உடனிருந்தனா்.