செய்திகள் :

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வெண்ணைத்தாழி உற்சவம்!

post image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு வெண்ணைத்தாழி உற்சவம் புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 18 நாள் பங்குனித் திருவிழாவும்,அதனைத் தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறும். நிகழாண்டின் திருவிழா கடந்த மார்ச் 18 ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய நிகழ்வுகளான,வெள்ளி ஹம்ச வானத்தில் ராஜ அலங்கார சேவை,கோவர்த்தனகிரியில் கண்ணன் திருக்கோலம், மரவுரிராமர் திருக்கோலம்,கணடபேரண்ட பட்க்ஷிவாகனம்,வண்ண புஷ்ப பல்லக்கு சேவை, தங்க சூர்யபிரபை, ஆண்டாள் திருக்கோலம், தங்க கருடவாகனம் ஆகியவை நடைபெற்றது.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் கடிதம்

ராஜகோபாலசுவாமி மீது வெண்ணையை தெளித்து வழிப்படும் பக்தர்கள்

16 ஆம் நாள் திருவிழாவான, புதன்கிழமை வெண்ணைத்தாழி உற்சவத்தை முன்னிட்டு காலையில் சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருக்கோயிலின் நான்கு வீதிகள், மேலராஜவீதி, காமராஜர்சாலை, பந்தலடி வழியாக காந்திசாலை வெண்ணைத்தாழி மண்டபம் சென்றடைந்தார்.

அப்போது,சாலையில் இருபக்கங்களில் திரண்டியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி மீது வெண்ணையை தெளித்து,கோபாலா,கோபாலா என பக்தி கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர்.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வெண்ணைய் தாழி திருவிழாவினை முன்னிட்டு உற்சவர் ராஜகோபாலசுவாமி மீது வெண்ணையை தெளித்து வழிப்படும் பக்தர்கள்

நிகழ்ச்சியில், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சி. இளவரசன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் , கோயில் செயல் அலுவலர் எஸ்.மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் 17 ஆம் நாளான நாளை வியாழக்கிழமை(ஏப்.3) மதியம் 2 மணிக்கு,உற்சவர் ராஜகோபாலசுவாமி தேரில் எழுந்தருளும் தேரோட்டம் நடைபெறுகிறது.

பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைவு: மாணிக் சா்க்கா்

மதுரை: மத்திய பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைந்து விட்டதாக திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் குற்றஞ்சாட்டினாா்.மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாந... மேலும் பார்க்க

மதசார்பற்ற சக்திகளை அணி திரட்ட வேண்டும்: பிரகாஷ் காரத்

மதுரை: மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அனைத்து மதசார்பற்ற சக்திகளையும் அணி திரட்ட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் வலியுறுத்தினார். மாா்க்சிஸ்ட் கம்யூ... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப் பாதையில் விழுந்த பெரிய மரம்: போக்குவரத்து பாதிப்பு

ஏற்காடு மலைப்பாதையின் எட்டாவது கொண்டை ஊசி வளைவில் பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு வரும் சு... மேலும் பார்க்க

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவுக்குச் சென்ற அமெரிக்கர் கைது!

இந்தியாவின் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளிலுள்ள தடை செய்யப்பட்ட தனித் தீவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான வடக்கு சென்... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்...!

ஜப்பான் நாட்டில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் மூன்றாவது மிகப் பெரிய தீவான கியூஷூவில், இன்று (ஏப்.2) இரவு 7.34 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலப்பரப்பிலிருந்து சுமார் 30 கி.ம... மேலும் பார்க்க

3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!

3 முக்கிய மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றுள்ளது. மத்திய ஆசியாவைச் சேர்ந்த தஜிகிஸ்தான் குடியரசு, உஸ்பெகிஸ்தான் குடியரசு மற்றும் கிர்கிஸ்தான் குடியரசு ஆகிய நாடுக... மேலும் பார்க்க