``வீடு கட்டுவதாக கூறிவிட்டு, டாஸ்மாக் கடை திறப்பு” - ஏமாற்றிய அதிகாரிகள்; கொந்தள...
'ஆரோக்கியமாகவும், உயிருடனும்' - கைலாசா அறிவிப்பு; KGF பி.ஜி.எம் உடன் என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா
நித்தியானந்தாவை சுற்றி சர்ச்சை ஓயவே ஓயாது போல. தொடர் வழக்குகளால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, 'கைலாசா' என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அங்கிருந்து பேசுவதாகவும் அடிக்கடி யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
ஆனால், இன்று வரை கைலாசா என்ற நாடு எங்கு இருக்கிறது என்பதும், நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. இவரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, நித்தியானந்தா இறந்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது. இந்தத் தகவல் குறித்து நித்யானந்தாவின் சகோதரி மகன், 'இந்து தர்மத்தை காக்க நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டார்' என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

"பகவான் நித்யானந்த பரமசிவம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருப்பதாக கைலாஸா உறுதியாக அறிவிக்கிறது" என்று இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக கைலாசா வலைதள பக்கத்தில் நேற்று அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையை அடுத்து, தற்போது கே.ஜி.எஃப் பட பி.ஜி.எம்முடன் 'நான் வீழ்வேன் என நினைத்தாயோ?' என்ற கேப்ஷனுடன் நித்யானந்தா வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ...