செய்திகள் :

காதல் விவகாரத்தில் தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்!

post image

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த தங்கையை அண்ணன் ஆணவக் கொலை செய்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் மனைவி தங்கமணி மகன் சரவணன் மற்றும் மகள் வித்யா உடன் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யா (22) கோவை அரசு கல்லூரியில் பயின்று வருகிறார். திருப்பூர் விஜயாபுரம் பகுதியை சேர்ந்த வெண்மணி என்பவரை வித்யா காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் விவரம் வீட்டிற்கு தெரியவந்த நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்களது வீட்டில் குடும்பத்தினருக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த மார்ச் 30 ஆம் தேதி தண்டபாணி அவரது மனைவி தங்கமணி இருவரும் கோயிலுக்கு சென்றதாகவும், மகன் சரவணனும் வெளியே சென்ற நிலையில், திரும்பி வந்தபோது வீட்டில் தனியாக இருந்த வித்யா பீரோ விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து வித்யாவின் பெற்றோர் 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வித்யா பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் குடும்பத்தினர் வித்யா உடலை இடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து காதலியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காதலன் அளித்த புகாரை அடுத்து பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை செய்ய வேண்டும் என காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் கடிதம்

கிராம நிர்வாக அலுவலரின் புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பீரோ விழுந்ததால் வித்யாவின் தலையில் காயம் ஏற்பட்டதா? அல்லது தாக்கி கொலை செய்யப்பட்டாரா? என்பதை கண்டறிய பல்லடம் வட்டாட்சியர் சபரிகிரி தலைமையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள் உதவியுடன் வித்யாவின் உடலை தோண்டி எடுத்து இடுகாட்டிலேயே வைத்து உடல்கூறாய்வு செய்தனர்.

இதில், வித்யா தலையில் பலத்த காயம் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது உடல் பாகங்களை சோதனைக்காக மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உடல்கூறாய்வு முடிந்த பின் வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும் அண்ணன் சரவணன் இருவரையும் விசாரணைக்காக காமநாயக்கன்பாளையம்

போலீசார் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததை அண்ணன் சரவணன் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ், தங்கை வித்யாவை நன்றாக படிக்குமாறு அண்ணன் சரவணன் தெரிவித்து வந்ததாகவும் அதனால் அண்ணனுடன் கடந்த இரண்டு மாதமாக வித்யா பேசவில்லை.

இந்த நிலையில், காதலை கைவிட்டு படிக்குமாறு தெரிவித்தபோது வித்யா மறுத்து பேசியதால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் சரவணன் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த வித்யா இறந்துள்ளார். சம்பத்தன்று பெற்றோர் வீட்டில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு மலைப் பாதையில் விழுந்த பெரிய மரம்: போக்குவரத்து பாதிப்பு

ஏற்காடு மலைப்பாதையின் எட்டாவது கொண்டை ஊசி வளைவில் பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு வரும் சு... மேலும் பார்க்க

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவுக்குச் சென்ற அமெரிக்கர் கைது!

இந்தியாவின் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளிலுள்ள தடை செய்யப்பட்ட தனித் தீவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான வடக்கு சென்... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்...!

ஜப்பான் நாட்டில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் மூன்றாவது மிகப் பெரிய தீவான கியூஷூவில், இன்று (ஏப்.2) இரவு 7.34 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலப்பரப்பிலிருந்து சுமார் 30 கி.ம... மேலும் பார்க்க

3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!

3 முக்கிய மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றுள்ளது. மத்திய ஆசியாவைச் சேர்ந்த தஜிகிஸ்தான் குடியரசு, உஸ்பெகிஸ்தான் குடியரசு மற்றும் கிர்கிஸ்தான் குடியரசு ஆகிய நாடுக... மேலும் பார்க்க

ஆட்சிக் கவிழ்ப்பின்போது கைதான முக்கிய அதிகாரிகளை விடுவித்த நைஜர் ராணுவ அரசு!

நைஜர் நாட்டின் ராணுவ அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்த முக்கிய அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளை விடுதலை செய்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு ராண... மேலும் பார்க்க

யூத மதகுருவைக் கொலை செய்த 3 பேருக்கு மரண தண்டனை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத மதகுருவின் கொலை வழக்கில் கைதான 3 உஸ்பெகிஸ்தான் நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மால்டோவா மற்றும் இஸ்ரேல் நாட்டு குடியுரிமைப் பெற்றவர் ஸ்வி கோகன் (வயது 28) , இவ... மேலும் பார்க்க