``வீடு கட்டுவதாக கூறிவிட்டு, டாஸ்மாக் கடை திறப்பு” - ஏமாற்றிய அதிகாரிகள்; கொந்தள...
ராமநாதபுரம்: சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; உடந்தையாக இருந்த தாய் உட்பட மூவர் கைது; என்ன நடந்தது?
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்ற அவருக்குத் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அச்சிறுமி அழுதபடி வகுப்பிலிருந்துள்ளார். இதனைக் கண்ட பள்ளி ஆசிரியர், அந்த சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது தன்னைக் கல்லூரி மாணவர்கள் இருவர் பாலியல் சீண்டல் செய்து வந்ததைத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த ஆசிரியர் இச்சம்பவம் குறித்து குழந்தைகள் நலப் பாதுகாப்பு மையத்தில் புகார் செய்தார்.
குழந்தைகள் நலப் பாதுகாப்பு கண்காணிப்பாளர் சிறுமி பாதிக்கப்பட்டது தொடர்பாக விசாரித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அந்த சிறுமி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கோவை தனியார்க் கல்லூரி மாணவரான வாலாந்தரவையைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் சிறுமியின் தாய்க்கும் தகாத உறவு இருந்துள்ளது தெரியவந்தது.
ஒரு கட்டத்தில் மாணவர் நவீன் அந்த சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததும், இதற்கு அந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

மேலும் அந்த சிறுமி தனது வீட்டின் அருகில் உள்ள ஆசிரியை ஒருவரிடம் டியூசன் சென்ற போது, அந்த ஆசிரியையின் மகனும் கல்லூரி மாணவருமான பரத் என்பவரும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் விசாரணையின் போது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் தாயார், கல்லூரி மாணவர்கள் நவீன், பரத் ஆகியோர் மீது போக்சோ பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது தாய் மற்றும் கல்லூரி மாணவர்கள் நவீன், பரத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.