செய்திகள் :

பல்லடம்: தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்; காதலனின் புகாரால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

post image

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி - தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞர் அதே கல்லூரியில் வித்யாவுடன் படித்து வருகிறார். மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெண்மணி வித்யாவின் வீட்டிற்கு பெண் கேட்டு வந்ததாகவும், பெண் கொடுக்க வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் சரவணன் சம்மதிக்கவில்லை என்றும் தெரிகிறது. மேலும், வெண்மணியுடனான காதலை கைவிடுமாறு தங்கை வித்யாவை சரவணன் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வித்யாவின் பெற்றோர்கள் கோயிலுக்குச் சென்ற நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வித்யாவின் மீது பீரோ விழுந்து தலையில் காயமடைந்த நிலையில் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் வித்யாவின் நண்பர்களைக் கூட பார்க்க அனுமதிக்காமல் உடலை அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.

இதனிடையே வித்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது காதலன் வெண்மணி என்பவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய போலீஸார் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினர். முதற்கட்டமாக உயிரிழந்த வித்யாவின் பெற்றோரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை பேராசிரியர் மருத்துவர் குகன், உதவி பேராசிரியர் மருத்துவர் முத்துக்குமார் ஆகியோர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ள வித்யாவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

அதில், தலையில் அடித்து வித்யா கொலை செய்யப்பட்டிருப்பது உறதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

க்ரைம்

அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வித்தியாவுக்கும், அவரது சகோதரர் சரவணனக்கும் இடையே காதல் விவகாரம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, வெண்மணியுடனான காதலை கைவிடுமாறு வித்யாவை சரவணன் மிரட்டியுள்ளார். ஆனால், வித்யா அதற்கு மறுப்புத் தெரிவித்ததால், அரிவாளின் கைப்பிடியில் வித்யாவின் தலையில் சரவணன் தாக்கியுள்ளார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த வித்யா அதிகமான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர். பீரோ விழுந்து வித்யா உயிரிழந்துவிட்டதாக சரவணன் நாடகமாடியுள்ளார். இதைத் தொடர்ந்து. சரவணனை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்தக் கொலையில் வித்யாவின் பெற்றோர் மற்றும் வேறுயாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மாற்று சமூக இளைஞரை காதலித்ததற்காக இளம் பெண்ணை அண்ணனே அடித்துக் கொலை செய்த கொடூரம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``நவராத்திரியில் மாதவிடாய்; விரதம் இருக்க முடியவில்லை..'' - மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த பெண்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் பிரியன்ஷா சோனி (36). ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். கடந்த 30-ம் தேதி வசந்த நவராத்திரி விழா தொடங்கியது. வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட முடிவு... மேலும் பார்க்க

வாட்ஸ்அப்க்கு வந்த இன்ஸ்டா லிங்க் - ரூ.150க்கு ஆசைப்பட்டு ரூ.61 லட்சத்தை இழந்த மராத்தி நடிகர்!

நாட்டில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த மோசடியில் பொதுமக்கள் தொடர்ந்து கோடிக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அந்த பட்டியலில் மராத்தி நடிகர் சாகர் கராண்டே என்பவரும... மேலும் பார்க்க

'டெல்லி க்ரைம் பிராஞ்ச்ல இருந்து வரேன்' - கோவையில் சிக்கிய போலி அதிகாரி; அலட்சியம் காட்டியதா போலீஸ்?

டிஜிட்டல் அரெஸ்ட் என்கிற சைபர் க்ரைம் மோசடி நாடு முழுவதும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த மோசடியில் போலி அதிகாரிகள் வீடியோ கால் மூலம் வந்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்தனர். இந்நிலையில் போலி அதிகாரி... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டும்..! கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் திடீரென விழுந்த கான்கிரீட் - ஆடி கார் சேதம்!

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக கோவையில் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்படும் பாலங... மேலும் பார்க்க

மதுரை: 22 ஆண்டுகளாகத் தொடரும் பழிக்குப்பழி கொலைகள்; அதிர வைக்கும் அடுத்த சாப்டர்; பின்னணி என்ன?

'அடக்க முடியாத கோபத்தைக் கட்டி வை, காலம் உன்னிடம் வரும்போது ஒருவனையும் விடாதே... கருவறு..." - சமீபத்தில் மதுரையில் என்கவுன்டர் செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸின் நண்பர்கள் முகநூலில் வெளியிட்ட அஞ்சலிக் கு... மேலும் பார்க்க

திருச்சி: விடுதி மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை; பாதிரியார் உள்ளிட்ட இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்றும் உள்ளது. இதில், 110 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்... மேலும் பார்க்க