இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
`ஒரு பாட்டில் ரூ.6300' - நடிப்பு, கிரிக்கெட்டை தொடர்ந்து மது விற்பனையிலும் ஷாருக்கான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரைப்படங்களில் நடிப்பதோடு படங்களை தயாரிப்பது, ஐ.பி.எல். கிரிக்கெட் என பல தொழில்களை செய்து வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் தொழில்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்து வருகிறது. கடைசியாக நடித்த படமும் ஆயிரம் கோடி வசூலை கொடுத்துள்ளது.
தற்போது ஷாருக்கான் சத்தமே இல்லாமல் புது தொழில் ஒன்றில் சாதித்து வருகிறார். அதாவது புதிதாக மது விற்பனையை தொடங்கி இருக்கிறார். இவ்விவகாரத்தில் தனது மகன் ஆர்யன் கானையும் கூட்டு சேர்த்துக்கொண்டுள்ளார். டி'யாவோல் என்ற பிராண்டில் மது வகைகளை ஷாருக்கான் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

கடந்த ஆண்டுதான் ஷாருக்கான் தனது மகனோடு சேர்ந்து இத்தொழிலில் இறங்கினார். ஆனால் அதற்குள் அவரது பிராண்ட் மதுபானங்கள் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்துவிட்டது.
ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் சர்வதேச மது போட்டி நடந்தது. இதில் ஷாருக்கான் நிறுவனத்தின் மது வகைகளும் கலந்து கொண்டன. இதில் ஷாருக்கானின் கம்பெனி மது வகைகள் 100-க்கு 95 சதவீத புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்று இருக்கிறது.
இந்த ஆண்டு மட்டுமல்லாது கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச மது போட்டியில் ஷாருக்கானின் டி'யாவோல் பிராண்ட் ஸ்காட்ச் விஸ்கி சிறந்த பிராண்ட் மதுபானம் என்ற விருதை பெற்றது. ஷாருக்கான் நிறுவனம் 3 வகையான மது வகைகளை விற்பனை செய்து வருகிறது.

இதில் டி'யாவோல் சிங்கில் எஸ்டேட் வோட்கா ஒரு பாட்டில் ரூ.5000-க்கு விற்பனையாகிறது. அதேசமயம் விஸ்கி ரூ.6300 -க்கு விற்பனையாகிறது. இந்த வகை டி'யாவோல் பிரமியம் ஸ்காட்ச் விஸ்கி மகாராஷ்டிராவில் 5350-க்கும், கோவாவில் ரூ.4500-க்கும் விற்பனையாகிறது.
ஏற்கெனவே ஷாருக்கான் பல பொருள்களின் பிராண்ட் விளம்பரங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். குட்கா விளம்பரத்தில் நடிக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் குட்கா தயாரிப்பதை நிறுத்துங்கள். என்னை வேலை செய்ய விடாமல் தடுக்காதீர்கள் என்று கூறி ஷாருக்கான் குட்கா விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்த மறுத்துவிட்டார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
