MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
Krrish 4: ஹ்ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 4 படத்தை இயக்கப்போவது இவர்தான்; வெளியான செம அப்டேட்!
இந்தியாவில் எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் மிகவும் முக்கியமானது க்ரிஷ். இந்த படத்தின் நான்காவது பாகம் குறித்து சமீபத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.
க்ரிஷ் படத்தின் முதல் 3 பாகங்களை ராக்கேஷ் ரோஷன் இயக்கியிருந்தார். ஆனால் நான்காவது பாகத்தை யார் இயக்குவார் என்பது குறித்து நீண்டநாட்களாக அப்டேட் இல்லாமல் இருந்தது.

நேற்றைய தினம் ஹ்ரித்திக் ரோஷனின் அப்பாவும் இயக்குநருமான ராக்கேஷ் ரோஷன், தனது இன்ஸ்டாகிராமில் ஹ்ரித்திக் ரோஷனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.
அதில், ஹ்ரித்திக் ரோஷன் இயக்குநராக அறிமுகப்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தந்தையும் மகனும் இருக்கும் புகைப்படத்தின் கீழ், "டக்கு (ஹ்ரித்திக் ரோஷனின் செல்லப் பெயர்) 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் உன்னை நடிகனாக அறிமுகப்படுத்தினேன்.
இன்று மீண்டும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது லட்சியத் திரைப்படமான Krrish 4 -ஐ முன்னெடுத்துச் செல்ல, திரைப்பட தயாரிப்பாளரான ஆதித்யா சோப்ராவும், நானும் உன்னை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறோம்.
இந்தப் புதிய அவதாரத்தில் நீ வெற்றி பெற உன்னை ஆசீர்வதித்து வாழ்த்துகிறேன்" என எழுதியுள்ளார் ராக்கேஷ் ரோஷன்.
கடந்த சில மாதங்களாக க்ரிஷ் 4 படம் பட்ஜெட் பிரச்னை காரணமாகத் தேங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
சித்தார்த் ஆனந்த்தும் அவரது தயாரிப்பு நிறுவனமான மார்ஃபிளிக்ஸும் நிதி காரணங்களாலேயே படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
சித்தார்த் விலகியதால் எடுத்து வந்த இயக்குநர், கரண் மல்ஹோத்ராவும் படத்திலிருந்து விலகினார்.
இறுதியாக ஹ்ரித்திக் ரோஷன் கேப்டனாக இந்தக் கப்பலை நடத்த முன்வந்துள்ளார். தயாரிப்பாளர்கள் இருவரும் இயக்குநர்கள் என்பதால் அவர்களது வழிகாட்டுதல் ஹ்ரித்திக்குக்கு உதவக் கூடும்.
கோய்... மில் கயா (2003), க்ரிஷ் (2006), மற்றும் க்ரிஷ் 3 (2013) படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை ஹ்ரித்திக் ரீ கிரியேட் செய்வாரா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...