சிக்கந்தர் : 'இந்தப் படத்தில் பணியாற்றியது கனவு போல் இருக்கிறது' - நெகிழும் சந்தோஷ் நாராயணன்
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'சிக்கந்தர்'. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் சிக்கந்தர் படத்தில் பணியாற்றியது குறித்து சந்தோஷ் நாராயணன் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " 'சிக்கந்தர்' படத்தில் சில மாதங்கள் பணியாற்றியது கனவு போல் இருக்கிறது.

இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை தந்த ஏ.ஆர். முருகதாஸ் சாருக்கும், தயாரிப்பாளர் சாஜித் நதியாத்வாலாவிற்கும் நன்றி. இசையமைக்கும்போது சல்மான் கான் சார் மற்றும் சாஜித் உடன் நடந்த உரையாடல்களை நான் என்றும் நினைவில் வைத்துக்கொள்வேன்.
குறிப்பாக நன்றாக இசையமைப்பேன் என்று என்னை நம்பியதற்காக சல்மான் சாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்திற்காக நான் அமைத்த இசை சல்மான் சார், முருகதாஸ் சார், ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். என்னுடன் பணியாற்றிய இசை மற்றும் தொழில்நுட்பக் குழுவிற்கு நன்றி. சினிமாவையும் சல்மான் கானின் நடிப்பையும் கொண்டாடுவோம். இந்தப் படம் மற்றும் இசையைப் பற்றி உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள் . அது எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கும்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...