செய்திகள் :

நடிகர் சல்மான் கான் அணிந்த ரூ.34 லட்சம் மதிப்பிலான ராம ஜென்மபூமி கைக்கடிகாரம்... சிறப்பம்சம் என்ன?

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் சிகந்தர் படம் வரும் 30ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சல்மான் கான் பலத்த பாதுகாப்புடன் கலந்து வருகிறார். அவ்வாறு கலந்து கொள்ளும்போது சல்மான் கான் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கிறது. ரூ.34 லட்சம் மதிப்பிலான எபிக் எக்ஸ் ராம் ஜென்மபூமி டைட்டானியம் 2 ரக கடிகாரத்தை அவர் கையில் அணிந்திருக்கிறார். மிகவும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இக்கடிகாரம் ராம ஜென்மபூமியின் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை பிரதிபலிக்கும் வகையில் தனித்துவமான வேலைப்பாடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கடிகாரம், ராம ஜென்மபூமி மற்றும் இந்திய வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவத்துடன் தொடர்புடைய கூறுகளைக் காட்டும் வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.

கடிகாரத்தில் ராம ஜென்மபூமி கோயில் சிற்பத்துடன் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்து கடவுள்கள் பொறிக்கப்பட்டுள்ளது. 2டி டைட்டானியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதனை வடிவமைத்த எதோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சல்மான் கான் அணிந்திருக்கும் கடிகாரம் 44 மிமீ அளவு கொண்டதாகும். இக்கடிகாரத்தை கடந்த ஆண்டுதான் எதோஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. ராம ஜென்மபூமி டிசைனில் இரண்டு கடிகாரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்தியா கேட், கேட்வே ஆஃப் இந்தியா, தாஜ்மகால் மற்றும் குதுப்பினார் ஆகியவற்றை பிரிதிபலிக்கும் வகையில் கடிகாரங்களை எதோஸ் நிறுவனம் வெளியிட்டு கெளரவித்துள்ளது.

சல்மான் கானின் தந்தை சலீம் கான் முஸ்லிம் என்றாலும் அவரது தாயார் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது தாயார் சுசீலா திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சல்மா கான் என்று மாற்றி வைத்துக்கொண்டார்.

Sikandar: 4000 பேரில் 5 பேர் தேர்வு; படத்தில் நடித்த குழந்தைகளை ஆச்சரியப்படுத்திய சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த சிகந்தர் படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தில் 5 குழந்தைகள் நடித்திருந்தனர். அவர்களைத் தேர்வு செய்ய 4 ஆயிரம் குழந்தைகளை ஒத்திகைக்காக அழைத்திருந்தனர். பல ந... மேலும் பார்க்க

Sikandar: வெளியாவதற்கு முன்பே டெலிகிராமில் லீக் ஆன சல்மான் கான் திரைப்படம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்குகளில் வெளியானது சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படம். வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே ஆன்லைனில் பல பைரேட்டட் வலைதளங்களில் இந்த படம் கிடைப... மேலும் பார்க்க

"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - சல்மான் கான் ஆதங்கம்

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட்டில் 'சிக்கந்தர்' படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சல்மான் கானும், ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருகின்றனர். நாளை ( மார்ச் 30) இத்திரைப்படம் வெளியாக இருக்கும் ... மேலும் பார்க்க

Krrish 4: ஹ்ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 4 படத்தை இயக்கப்போவது இவர்தான்; வெளியான செம அப்டேட்!

இந்தியாவில் எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் மிகவும் முக்கியமானது க்ரிஷ். இந்த படத்தின் நான்காவது பாகம் குறித்து சமீபத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.க்ரிஷ் படத்தின் முதல் 3 பாகங்களை ராக்கேஷ் ரோஷ... மேலும் பார்க்க

Salman Khan: ``என் வாழ்க்கை கடவுள் கையில்'' - லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் குறித்து சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடு... மேலும் பார்க்க

``ரூ.90 கோடி கடன், நடந்து சென்றேன்; இப்போது ரூ.3000 கோடிக்கு சொத்து..'' -மனம் திறந்த அமிதாப்பச்சன்

நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார். அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்கவேண்டியிருந்தது. தினம் தினம் கடன் கொடுத்தவர்கள் அவரது வ... மேலும் பார்க்க