செய்திகள் :

``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை

post image

நரேந்திர மோடி பிரதமரானப் பிறகு முதல் முறையாக நேற்றைய தினம் ஆர்.எஸ்.எஸ் மையத்துக்குச் சென்றிருந்தார். இங்கு மாதவ் நேத்ராலயா ப்ரிமீயம் மையம் என்கிற கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியப் பின் மோடி உரையாற்றியிருக்கிறார்.

இங்கு, பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்-ஐ இந்தியாவின் கலாசார ஆலமரம் என குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி
நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி

இங்கு பேசிய பிரதமர் மோடி, `` இந்தியாவிற்கு நாம் அடித்தளம் போடுவதாகவும் அது அடுத்த 1000 ஆண்டுகளுக்கு வலுவாக திகழும் என்பதை நான் அயோத்தில் கூறியிருந்தேன். நம் முன்னோர்களான ஹெட்கேவார் மற்றும் கோல்வால்கர் குருஜியின் வழிகாட்டுதல்களுடன் நாம் விக்சித் பாரத் திட்டத்தை சாதித்துக் காட்டுவோம்.

நம் தலைமுறையினரின் தியாகங்களை நாம் வீணடிக்கமாட்டோம். ஆர்.எஸ்.எஸ் 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது இந்தியாவில் சுந்ததிரப் போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது.

இப்போது 100 வருடங்களைக் கடந்தப் பிறகு முக்கியமான தருணத்தில் நாம் நிற்கிறோம். அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால் பெரிய லட்சியங்களை நாம் எட்ட வேண்டியது இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் விதை 100 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்டது. அது இன்று பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.

கோடிக்கணக்கான சுயம்சேவகர்கள் கிளைகளாக படர்ந்து நிற்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் அழியாத கலாசரத்தின் ஆலமரமாகவும் விளங்குகிறது.

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி
நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி

இது ஒரு அமைப்பு மட்டுமல்ல, தேசிய உணர்வுகளின் சக்தியாகவும் விளங்குகிறது. இந்தியாவின் பண்பாட்டு உணர்வுகள் ஒருபோதும் தளரவில்லை. அந்த உணர்வுகளை உயிர்ப்புடன் வைப்பதில் ஆர்.எஸ்.எஸ் முக்கிய பங்கு வகிக்கிறது." எனப் பேசியிருக்கிறார்.

மேலும், வான்வாசி கல்யாண், ஏகல் வித்யாலயா, சேவ பாரதி போன்ற ஆர்.எஸ்.எஸின் சேவைகளை பாராட்டி பேசியிருந்தார் மோடி.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ஏப்ரல் 6-ல் புதிய பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி வருகை ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

நாட்டின் நிலப்பரப்பினை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடல் மீது ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாலம் கட்டப்பட்டது. 1914ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து சேவை துவக்கப்பட்ட இந்தப் பாலத்தை கப்ப... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: `ஆபத்தான சாலை' - சுட்டிக்காட்டிய விகடன்; பாதுகாப்பை உறுதிப்படுத்திய அதிகாரிகள்!

திருப்பத்துாரில் இருந்து பெரிய ஏரி வழியாக திருமால் நகர், மிட்டூர், ஆண்டியப்பனுார், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள், தொழிலாள... மேலும் பார்க்க

வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்.... நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் குப்பைகளை அகற்றிய அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியை அடுத்த மேல்மொனவூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையின் அருகிலேயே குப்பைகள் பரவி கிடந்தன. இந்த மேல்மொனவூர் பகுதியில் உள்ள சதுப்பேரியின்... மேலும் பார்க்க

`சென்னையை நாட்டின் 2வது தலைநகராக்க வேண்டும்’ - நயினார் கோரிக்கைக்கு பதில் கோரிக்கை வைத்த சபாநாயகர்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு பிறகு இன்று கூடியிருக்கிறது. தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து ஒவ்வொரு துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயில் நுழைவு போராட்டம் - சீமான் கொந்தளிப்பின் பின்னணி என்ன?

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை திறக்காவிட்டால் ஆலய நுழைவு போராட்டம் நடத்துவோம் என சீமான் அறிவித்திருப்பது பரபரப்பை கிளம்பியிருக்கிறது. இந்நிலையில், `இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறக்கப... மேலும் பார்க்க

``திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்'' - சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், மதுரையில் கட்டப்பட்ட நூலகத்திற்கு `கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என்று பெயர் வைக்கப்பட்டது. இதையடுத்து கோவை, திருச்சியில் அடுத்தடுத்து நூலகங்கள் கட்டப்படும் எ... மேலும் பார்க்க