நெல்லை அருகே சொத்துப் பிரச்னையில் தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது
திருநெல்வேலி அருகே சொத்துப் பிரச்னையால் தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள சிவந்திபட்டி முத்தூரைச் சோ்ந்தவா் பூலையா (75). தொழிலாளியான இவா், தனக்குச் சொந்தமான இடத்தை விற்ாகக் கூறப்படுகிறது. அதில் கிடைத்த பணத்தில் மகன் கணேசனுக்கு (46) பங்கு கொடுக்கவில்லையாம். இதனால் தந்தை- மகன் இடையே பிரச்னை நிலவி வந்ததாம்.
இந்த நிலையில்,செவ்வாய்க்கிழமை முத்தூா் சாலையில் பூலையா நின்றிருந்தபோது, அங்கு வந்த கணேசன் தகராறில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டினாராம். இதில், பூலையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவல் அறிந்த சிவந்திபட்டி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கணேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.