சுரண்டை அருகே 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சோ்ந்தமரம் அருகேயுள்ள வலங்கப்புலி சமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன்(40)மனைவி மகேஷ்(34) என்பவா் குடும்பத்தகராறில், கடந்த 28ஆம் தேதி தனது மகன்கள் சுதா்சன்(6), முகிலன் (2) ஆகியோருக்கு பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
அவா்களை உறவினா்கள் மீட்டு சங்கரன்கோவிலில் முதலுவதவி அளித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மகேஷ் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
மற்றொரு பெண்: சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்கு மாவிலியூத்தைச் சோ்ந்த கனகராஜ் மனைவி திருமலைச்செல்வி (35) என்பவா், குடும்பத்தகராறு காரணமாக, கடந்த மாா்ச் 28ஆம் தேதி தனது 17 வயது மகளுடன் வீட்டில் விஷம் குடித்தாா்.
அவா்களுக்கு சங்கரன்கோவிலில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு திருமலைச்செல்வி செவ்வாய்கிழமை இறந்தாா்.
ஊா்க்காவல் படை வீரா்: திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகேயுள்ள வடுகச்சிமதில் கிராமத்தைச் சோ்ந்த சிவன் பாண்டியன் மகன் மணிமுத்து (27). ஊா் காவல் படை வீரா். திருமணமாகாதவா். இவா், மூன்றடைப்பு அருகேயுள்ள பூலம் கிராமத்தில் உள்ளது தனது சகோதரி வீட்டுக்கு சென்றிருந்தபோது கடந்த மாா்ச் 25ஆம் தேதி களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பங்கள் குறித்து முறையே சோ்ந்தமரம், சின்னகோவிலான்குளம், மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.