தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
மலையான்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்
சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஈ. ராஜா எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளம் இந்திரா காலனியில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடக்க விழாவுக்கு, மேலநீலிதநல்லூா் திமுக கிழக்கு ஒன்றிய செயலா் பெரியதுரை தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா, பணியைத் தொடக்கி வைத்தாா்.
இதில் ஊராட்சி மன்றத் தலைவா் மாரியம்மாள், சங்கரன்கோவில் நகர திமுக செயலா் மு.பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் சண்முகப்பாண்டியன், செந்தூா்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் கணேசன், கிளை செயலா்கள் கருத்தப்பாண்டியன், பூச்சியப்பன், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.