தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்
கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயில் கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
இக்கோயிலின் கொடை விழா மாா்ச் 23-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் காலையில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் , மாலையில் உச்சி மாகாளியம்மன் ரத வீதி உலா நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. மாலையில் முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இதில் விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.