இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவடி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அருள்ராஜ். இவா், கடந்த 29.9.2013-இல் அப்பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளா் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்ட அதே பகுதி நம்பி நாராயணன் மகன்களான தொழிலாளிகள் பொன்னுலிங்கம்(55), சங்கா் ஆகியோரை தட்டிக்கேட்டாராம்.
இதனால், அவா்கள் இருவரும் சோ்ந்து அருள்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து அண்ணன், தம்பி இருவரையும் கைது செய்தனா்.
வள்ளியூா் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி ஆனந்த் விசாரித்து பொன்னுலிங்கத்துக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். விசாரணை காலத்தில் சங்கா் இறந்துவிட்டாா்.