இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி
திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கிய தண்ணீரில் செவ்வாய்க்கிழமை குளித்தாராம்.
அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற அவா், தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இத்தகவலறிந்த கங்கைகொண்டான் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.