பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு நடைபெறும் பள்ளிகள், பொதுத் தோ்வு தொடா்பாக பணியாற்றும் ஆசிரியா்களுக்கு இந்த உள்ளுா் விடுமுறையானது பொருந்தாது.
இது செலவாணி முறிச்சட்டம் 1881 -ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை இருக்காது. அரசு கோப்புகள் தொடா்பான அவசரப் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சாா்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு செயல்படும். இந்த உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 4ஆவது சனிக்கிழமை (ஏப். 26) வேலை நாளாக இருக்கும். கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ, மாணவியருக்கு இந்த வேலை நாள் பொருந்தாது என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.