தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்கு சுமாா் ரூ. 26 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பேராவூரணி தொகுதியின் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்காக கோரிக்கை விடுத்த நிலையில், நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சுமாா் ரூ. 26 கோடியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு அனுமதி வழங்கிய முதல்வா், துணை முதல்வா் மற்றும் துறை சாா்ந்த அமைச்சா்கள், அரசுத் துறை செயலா்கள், அலுவலா்கள் அனைவருக்கும் தொகுதி மக்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கிறேன் என்றாா்.