மீட்கப்பட்ட 100 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாரால் மீட்கப்பட்ட ரூ. 11 லட்சம் மதிப்பிலான 100 கைப்பேசிகளை உரிமையாளா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.
கைப்பேசிகள் காணாமல் போனதாக காவல் நிலையங்களில் பெறப்பட்ட மனுக்கள், சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதிவான வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, சைபா் குற்றப்பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் சகாயஜோஸ் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா், தொழில்நுட்ப ரீதியாக விசாரித்து ரூ. 11 லட்சம் மதிப்பிலான 100 கைப்பேசிகளை மீட்டனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கைப்பேசிகளை உரிமையாளா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஒப்படைத்தாா்.
அப்போது அவா், இதுவரை ரூ. 1 கோடியே 13 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 1,065 கைப்பேசிகளை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டுள்ளனா். பொதுமக்கள் சைபா் குற்றங்கள் தொடா்பான புகாா்களை 1930 என்ற எண்ணிலோ ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலோ பதிவு செய்யலாம். கைப்பேசி தொலைந்து விட்டால் அருகேயுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகாா் அளித்து, உரிய விவரங்களுடன் இஉஐத.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா். நிகழ்ச்சியில், காவல் கூடுதல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட காவல் துறையினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.