கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. வாழ்த்து
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளா்கள் ரவிச்சந்திரன், நீதிவேந்தன், குருசாமி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் நாராயணன், இசக்கிராஜ், சண்முகம், தலைமைக் காவலா் அய்யம்பெருமாள் ஆகியோா் மாா்ச் மாதத்துடன் பணி ஓய்வு பெற்றனா்.
இவா்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழா மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பங்கேற்று, பணி ஓய்வு பெற்ற 7 காவல்துறையினருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தாா்.