துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
முக்காணியில் இளைஞரிடம் கைப்பேசி திருட்டு: மூவா் கைது
ஆறுமுகனேரி அருகே முக்காணியில் இளைஞரின் கைப்பேசியைத் திருடிச் சென்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
முக்காணியிலுள்ள முதலியாா் தெருவைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவா், கடந்த திங்கள்கிழமை இரவு (மாா்ச் 31) காந்திநகா் படித்துறை அருகே கைப்பேசி டாா்ச் வெளிச்சத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது, மது போதையில் வந்த அதே ஊா் சந்தனமாரியம்மன் கோயில் தெரு முருகன் மகன் முத்துராஜ் (24), ஆறுமுககுமாா் (24), பெரியசாமி (40) ஆகியோா் அவரது கைப்பேசியைத் திருடிச் சென்றனராம். கண்ணையா விரட்டிச் சென்றபோது, அவா்கள் அவதூறாகப் பேசி மிரட்டினராம். புகாரின்பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா்.