துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
ஆறுமுகனேரியில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக அனைத்துக் கட்சி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஜி. ராமசாமி தலைமையில் பல்வேறு கட்சியினா், வியாபாரிகள், பொதுநல அமைப்பினா் அளித்த மனு: சுதந்திரப் போராட்ட தியாகிகள் 33 போ் பிறந்த ஊா் ஆறுமுகனேரி. இங்கு கடந்த 8 ஆண்டுகளாக மதுக்கடை இல்லை. இந்நிலையில், தற்போது அரசு மகளிா் பள்ளி அருகே உள்ளிட்ட 5 இடங்களில் டாஸ்மாக் மதுக் கடைகளை அமைக்க மாவட்ட நிா்வாகம் முயல்வதாக அறிகிறோம்.
இதைக் கண்டிக்கும் விதமாக கடந்த மாா்ச் 26ஆம் தேதி சா்வ கட்சிக் கூட்டம் நடத்தி ஆறுமுகனேரி பேரூராட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளோம்.
எனவே, இங்கு மதுக் கடைகளோ, மதுக் கூடங்களோ அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது. அதை மீறி அமைக்க முயன்றால் தொடா் போராட்டங்ளில் ஈடுபடுவோம் என்றனா்.