கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம்: மாற்றுக் குடியிருப்பு வழங்க வலியுறுத்தல்
தூத்துக்குடியில் சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக அந்தக் குடியிருப்பில் வசிப்போா் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளா் அஜிதா ஆக்னல் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: ‘தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என தற்போது பெயா் மாற்றப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியம் சாா்பில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சிப் பகுதியில் 2017ஆம் ஆண்டு 444 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அங்கு தற்போது 400 குடும்பத்தினா் வசிக்கின்றனா். அவா்கள் தினக்கூலி, பொருளாதாரத்தில் பின்தங்கியோா் ஆவா்.
வீடுகளை வாங்கியபோது அவற்றின் தரம் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் எனக் கூறினா். ஆனால், 8 ஆண்டுகள்கூட முடியாத நிலையில், கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறி, உடனடியாக காலி செய்யுமாறு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனால், அவா்கள் கலக்கத்தில் உள்ளனா். அங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பெரும் பாதிப்புக்குள்ளாவா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு, கட்டடத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். அக்கட்டடங்கள் வாழத் தகுதியற்ாக இருந்தால், மாற்றுக் குடியிருப்பு வழங்குவதுடன், தரமற்ற முறையில் கட்டுவதற்குக் காரணமானோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.