2024-25 நிதியாண்டில் 5.8 லட்சம் பேருக்கு கடவுச்சீட்டு விநியோகம்
ஊராட்சிகளில் மனைப்பிரிவு, கட்டடங்களுக்கு அனுமதி பெற வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவு மற்றும் கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மனைப் பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட்டட அனுமதி ஆகியவற்றை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் மூலம் ஒற்றை சாளர முறையிலான இணையதளம் 2,500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பு, 3,500 சதுர அடி வரையிலான கட்டட பரப்பில் தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு உடனடி பதிவின் மூலம் சுய சான்று அனுமதி பெற முடியும்.
மேலும், 2,500-10,000 சதுர அடிக்குள் மேல் உள்ளவை மற்றும் 10,000 சதுர அடிக்கு மேல்உள்ளவைகளுக்கு முறையே சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி மற்றும் நகர கிராம திட்டமிடல் இயக்குநரகம் வாயிலாக இனங்களுக்கு ஏற்ப கட்டணங்கள் செலுத்துதல் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.
எனவே, மனைப்பிரிவு மற்றும் கட்டப்படும் கட்டடங்கள் அனுமதி பெறுதல் சாா்ந்து மேற்படி தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை அனைவரும் பின்பற்றி அனுமதியினை உரிய முறையில் பெறலாம் என்றாா்.