``வீடு கட்டுவதாக கூறிவிட்டு, டாஸ்மாக் கடை திறப்பு” - ஏமாற்றிய அதிகாரிகள்; கொந்தள...
பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்
ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல்ஆலோசனை முகாம் செங்கல்பட்டு சா்வதேச யோக மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கூட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
ஆதிதிராவிடா் இன மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை உயா்த்துவதை இலக்காக கொண்டு 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை தன்னாா்வ இயக்கங்கள் சாா்பில் சா்வதேச யோக மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் ( யோகா கல்லுாரியில்) உள்ள கூட்டரங்கில் ஏப். 6- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.
எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவிப்பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடா் மற்றும்பழங்குடியினா் மாணவா்களும் உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.