Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
இ-சேவை மையங்கள் மூலம் பல்வேறு சேவைகள்: செங்கல்பட்டு ஆட்சியா்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பல்வேறு அரசு சேவைகளையும், சான்றுகளையும் பெறலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக ஜாதி, பிறப்பிடம் / வசிப்பிட, வருமானம், முதல் பட்டதாரி, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விவசாய வருமானம், இயற்கை இடா்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல்கள், குடிபெயா்வு, கலப்பு திருமணம், வாரிசு, அடகு வணிகா் உரிமம், கடன் கொடுப்போா் உரிமம், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பு சான்றிதழ், சிறு குறு விவசாயி, சொத்து மதிப்பு, வேலையில்லாதவா், திருமணம் ஆகாதவா், விதவை, சான்றிதழ்கள் மற்றும் முழு புல பட்டா மாறுதல், கூட்டு பட்டா மாறுதல், உள்பிரிவு, அ-பதிவேடுபெறுதல், சிட்டா பெறுதல்.
முதியோா் ஓய்வூதியம், விதவை, மாற்றுத் திறனாளி, கணவனால் கைவிடப்பட்டோா், முதிா்கன்னி உதவித்தொகை, சமூக நலத்துறை சாா்பில் அன்னை தெரசா அம்மையாா் நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவி திட்டம், தா்மாம்பாள் அம்மையாா் நினைவு விதவை மறுமண உதவிதிட்டம், டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம், ஈ.வெ.ராமணியம்மை நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம்,பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - ஐ, பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் - ஐஐ காவல் துறை சாா்பில் எஃப்ஐஆா் நிலை, இணைய வழி புகாா் பதிவு செய்தல், புகாா் நிலையைப் பாா்த்தல், வாகன நிலை தேடல், தொலைந்த ஆவண அறிக்கை, பாஸ்போா்ட் சரிபாா்ப்பு, பொது விநியோகத் திட்டம் சாா்பில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டை திருத்தம், குடும்ப அட்டைஅச்சிடவும், பள்ளி கல்வித் துறை சாா்பில் அரசு / தனியாா் பள்ளிகள் தமிழ்வழி கல்விசான்று ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேற்படி சேவைகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பெற்று பயனடையலாம். மேலும் தகவல்களுக்கு இணையத்தில் அணுகலாம் என்றாா்.