நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கரிக்கிலி, வெள்ளபுத்தூா், அம்பேத்கா் நகா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தமது விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க நெல்கொள் முதல் நிலையம் அமைக்க கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், வெள்ளபுத்தூா் ஊராட்சியில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் மையத்தை ஊராட்சி மன்றத் தலைவா் வரதன் திறந்து வைத்தாா். துணைத் தலைவா் ப.விஜயகுமாா், ஊராட்சி மன்ற உறுப்பினா்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனா்.