அனைத்து ஜமாத் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
4சிஎம்பி8:
சிதம்பரத்தில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஜமாத் கூட்டமைப்பினா்.
சிதம்பரம், ஏப்.4: சிதம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து, வடக்கு பிரதான சாலை பள்ளிவாசல் அருகே அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிவாசல் தலைவா் முஹம்மது ஹலீம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் கையில் பாதாகைகளை ஏந்தி கண்டன முழக்கமிட்டனா்.
இதில், ஜாகீா்உசேன், முகமது ஜியாவூதின் உள்ளிட்ட சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.