`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
புதுக்கோட்டையில் ரமலான் சிறப்புத் தொழுகை
ரமலான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா திடலில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரமலான் எனப்படும் ஈகைப் பெருநாள் விழா நிகழாண்டில் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள ஈத்கா திடலில் காலை 7.30 மணிக்கு நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி, சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
புத்தாடைகள் அணிந்து வந்த அவர்கள், வீடுகளில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனிப்புகளையும் உணவுகளையும் வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

திருவருள் பேரவையினர்...
புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து சமயக் கூட்டமைப்பான திருவருள் பேரவை சார்பில், இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பேரவையின் தலைவர் டாக்டர் கே.எச். சலீம், செயலாளர் வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன், பொருளாளர் எஸ். மத்தியாஸ், துணைச் செயலர் பேரா. சா. விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஈத்கா திடலுக்குச் சென்று தொழுகை முடித்த இஸ்லாமியர்களுக்கு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
