பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்
இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.
தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகையில் பங்கேற்று கொண்டாடி வருகின்றனர்.
தொழுகை முடிந்த பிறகு, ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி அன்பைப் பகிா்ந்து கொண்டனா்.
ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து
மேலும் இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும் ரமலான் வாழ்த்துகளை பரிமாறினர்.
தொடா்ந்து வீடுகளுக்குச் சென்ற இஸ்லாமியா்கள், உறவினா்கள் நண்பா்கள் அனைவருக்கும் பிரியாணி உள்ளிட்ட உணவுகளைப் பகிா்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இஸ்லாமியா்களின் புனிதப் பண்டிகை ஈகைப் பெருநாள் எனப்படும் ரமலான். ஒரு மாதம் பகல் முழுவதும் நோன்பு இருந்து, நிறைவாக கொண்டாடப்படுகிறது.