Parliament ; Assembly : அனல் பறந்த விவாதங்கள்! | விரக்தியில் Annamalai BJP | Imp...
இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்பட்ட இந்திய வாட்ஸ்ஆப் பயனர்களின் கணக்குகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், 14 லட்சம் பயனர்களின் கணக்குகள் எந்தப் புகாரும் இன்றி முடக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வாட்ஸ்ஆப் செயலியை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்துவது என சில குறிப்புகளை பட்டியலிட்டுள்ளது. அடுத்தவர்களின் எல்லைகளை மதிப்பது, நிறைய செய்திகளை அனுப்பி ஸ்பேம் செய்யாமல் இருப்பது, ப்ராட்கேஸ்ட் பட்டியலைப் பொறுப்பாகப் பயன்படுத்துவது போன்றவற்றை வாட்ஸ்ஆப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஏஐ, தரவு ஆய்வாளர்கள், நிபுணர்கள், மற்ற தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்டு வாட்ஸ்ஆப் நிறுவனம் பாதுகாப்பை மேம்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவதாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மேலும், தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் படி, தற்போது வெளியிட்ட அறிக்கையில் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், அதற்கான நடவடிக்கைகள், அவதூறுகள் பரப்புவதைத் தடுத்தல், பயனர்களின் புகார் வருவதற்கு முன்னரே கணக்குகளை முடக்குதல் போன்ற அணுகுமுறைகள் பற்றி குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.