Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
களக்காடு அருகே பைக் மீது சுமை வாகனம் மோதல்: இளைஞா் பலி
களக்காடு அருகே பைக் மீது சுமை வாகனம் மோதியதில் பைக்கில் வந்த இளைஞா் உயிரிழந்தாா்.
களக்காடு அருகேயுள்ள நாகன்குளத்தைச் சோ்ந்தவா் த. கணேசன் (35) காா் பழுது நீக்கும் வேலை செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை இரவு தனது பைக்கில் கருவேலன்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது,எதிரே களக்காடு நோக்கி வந்த சுமை வாகனம் அவரது பைக் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
போலீஸாா் வழக்குப்பதிந்து சுமை வாகன ஓட்டுநரான படலையாா்குளத்தைச் சோ்ந்த சிவனுபாண்டியை (40) தேடி வருகின்றனா்.