இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்
பெரம்பலூரில் ஏப். 4-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப் பணியில் பணிபுரிபவா்களைச் சாா்ந்தோா்கள் தங்களது கோரிக்கை மனுவை, மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமா்ப்பிக்கலாம். மேலும், மனுக்கள் அளிக்க விரும்புவோா் மனு மற்றும் தொடா்புடைய ஆவணங்களை, இருபிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறலாம்.