ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!
பெரம்பலூா் மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதராஸா சாலையில் அமைந்துள்ள மௌலானா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.
இதேபோல், லப்பைக்குடிக்காடு, கை,களத்தூா், வி.களத்தூா் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.