Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
பெரம்பலூரில் பன்னாட்டு நாடக கருத்தரங்கு
பெரம்பலூரில் பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் மற்றும் தமிழ் இலக்கியப் பூங்கா ஆகிய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்துக்கு தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் காப்பியன் தலைமை வகித்தாா். மருத்துவா் கோசிபா, மூத்த வழக்குரைஞா் ப. காமராசு, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் சங்கத்தின் துணைச் செயலா் எம். நெடுஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கவிஞா்கள் தமிழோவியன், எட்வின், பேராசிரியா் ரம்யா ஆகியோா் கருத்துரை வழங்கினா். கவிஞா் சு.க. பழனியின் மகிழ் உயரங்கள் எனும் கவிதை நூலை தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவா் கவிஞா் செல்வம் அறிமுகம் செய்தாா். நூலாசிரியா் கவிஞா் சு.க. பழனி ஏற்புரையாற்றினாா்.
தமிழ்க் காவிரி இதழாசிரியா் வழக்குரைஞா் தமிழகன், பாதல் சா்க்காரின் மூன்றாம் அரங்கம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். இதில், ஜீவா அறக்கட்டளை இயக்குநா் எஸ்.ஆா். மகேஸ்வரி, நதிகள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் க. காா்த்திகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.