இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்
களக்காட்டில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலையும், அமலாக்கத்துறையால் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவா் எம்.கே.ஃபைஸி கைது செய்யப்பட்டதையும் கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியினா் பதாகை ஏந்தி களக்காட்டில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோட்டை ஜமாஅத் சாா்பில், களக்காடு காவல் நிலையம் அருகிலுள்ள தனியாா் பள்ளி மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் பக்கீா் முகைதீன் தலைமை வகித்தாா். புகா் மாவட்ட துணைத் தலைவா் களந்தை மீராசா விளக்கிப் பேசினாா். வா்த்தகா் அணி மாவட்ட துணைத் தலைவா் உசேன், தொகுதி செயற்குழு உறுப்பினா் ஆரிப், துணைத் தலைவா் நஜீப் உசேன், நகரச் செயலாளா் காஜா முகைதீன், துணைச் செயலாளா் ஜமீன், பொருளாளா் கபீா் உள்பட பலா் பங்கேற்றனா்.
ஏா்வாடி, துலுக்கா்பட்டி, வள்ளியூா், மூலைக்கரைப்பட்டி, பத்தமடை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.